பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது.
கலைத் திருவிழாவில் கலையரசன் விருது பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்#கலைத்திருவிழா #TNGovtSchools | #KalaiThiruvizha | #Students | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #பள்ளிக்கல்வித்துறை @mkstalin @Anbil_Mahesh pic.twitter.com/PfSabzVL1X
— Tamil Nadu School Education Department (@tnschoolsedu) January 12, 2023
அரசு பள்ளி மாணவர்களின் கலை மற்றும் அறிவியல் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த கல்வி ஆண்டு முதல் கலை திருவிழா நடைபெறுகிறது.
கடந்த சில மாதங்களாக ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த கலை திருவிழாவின் மாநில அளவிலான திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிறந்து விளங்கிய மாணவர்களின் அறிவியல் படைப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
#பள்ளிக்கல்வித்துறை நடத்தும் #கலைத்திருவிழா வில் பள்ளி,ஒன்றிய, மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் கலையரசன் பட்டம் பெறும் அரசுப்பள்ளி மாணவர் 2k மலேசியா வாசுதேவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🎉 pic.twitter.com/nbBdJB9kbf
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) January 12, 2023
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஜே. சிவராமன் பாடிய பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது.