சென்னை: கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் 12வது நாளாக இன்று தொடர்கிறது. இன்றைய போராட்டத்தின்போது, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட செய்ய செவிலியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
திமுக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட கொரோனா கால ஒப்பந்த பணியாளர்கள், தங்களின் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றைய போராட்டத்தின்போது, செவிலியர்கள் கொரோனா உடையான பிபிகிட் அணிந்து, சென்னை எழும்பூர் லேங்ஸ் சாலையில் இருந்து தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர்.
அவர்களை ராஜரத்தினம் மைதானம் அருகே தடுத்து நிறுத்தி காவல்துறையினர். அங்கிருந்து செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து, சுமார் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேரணி காரணமாக அப்பகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுத் தொடர்பாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உணவு பகுப்பாய்வு வாகனத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் வழங்கப்படும் பணியினை ஏற்றுக் கொள்ள வேண்டும், இதனால் சொந்த ஊருக்கு அருகில் கூடுதல் ஊதியத்தில் பணிப்புரியும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
12வது நாள்: கொரோனா உடை அணிந்து செவிலியர்கள் போராட்டம்! கோட்டை நோக்கி பேரணி?