சென்னை: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது, இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் கடவுன் அழகன் முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ந்தேதி நடைபெற உள்ளது. பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. ஞானப் பழம் அடைய வேண்டிய போட்டியில், தமையன் பிள்ளையாருடன் தோற்ற கோபத்தில் பழநியில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இதனால், இக்கோவில் கும்பாபிஷேகத்தை காண லட்சக்கண்ககான பக்தர்கள் பழனியில் திரளுவார்கள்.
பழனி கோவில் கும்பாபிஷேகம் 27ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ந்தேதி மாலை பூர்வாங்க பூஜைகள் தொடங்குகிறது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் மலைக்கோவிலில் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும்.
மேலும் 23-ந்தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜை தொடங்கி, கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருளியுள்ள சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிவடைந்து மகா தீபாராதனைக்கு பின்பு வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம்.
23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது. 28-ந்தேதிக்கு பிறகு வழக்கம்போல் நடைபெறும்.
அதேபோல் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான சேவை 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்குகளில் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு நடைபெறும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வின்போது சொர்ணபந்தனத்தில் அனைத்து பக்தர்கள் சார்பாக கோவில் நிர்வாகத்தில் விலை உயர்ந்த தங்கம், நவரத்தின கற்கள் வைக்கப்படும்.
மலைகோயில்மீது நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை காண 600 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
முன்னதாக, பழனி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய், போலீஸ், சுகாதாரம், போக்குவரத்து என அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் அனுமதி, முன்னேற்பாடு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படு என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவுல், இதற்கு கோவில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கம் பக்தர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்கஅனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 7.15 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியே அனுமதிக்கப்படுவர்.
க்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, அடிவார பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைத்து சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களின் வசதிக்காக, கருப்பணகவுண்டன்வலசு அருகே பைபாஸ் சாலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கவும், அங்கிருந்து பழனி நகருக்கு வர சிறப்பு பஸ்கள் இயக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த வகைக்கு பக்தர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் கோவிலில் உரிய ரசீது பெற்று கொள்ளலாம். கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கம், கிரிவீதிகளில் 18 பெரிய டி.வி.க்கள் மற்றும் கிரிவீதி, மத்திய பஸ்நிலையம், கோவில் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் 8எல்.இ.டி. வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் திருப்பணி வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திவிட்டு அதன் விவரம், ரசீது வழங்க வேண்டிய முகவரியை குறிப்பிட்டு கோவில் jceomdu 32203.hrce@tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்,
மின்பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்கள் ரசீது வழங்க ஏதுவாக குறிப்பு காலத்தில் தங்களது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடவும்.
அதேபோல் கும்பாபிஷேக யாகசாலை பூஜைப்பொருட்கள், அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்க விரும்பும் பக்தர்கள் தண்டபாணி நிலைய தங்கும் விடுதியில் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
புண்ணிய தீர்த்தங்களான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, அமராவதி, பவானி, தாமிரபரணி, வைகை, கோடி தீர்த்தம் மற்றும் இதர புண்ணிய தீர்த்தங்களை உரிய விரத நியமத்துடன் எடுத்து வந்து மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு பதிவு செய்யும் அலுவலகத்தில் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.