சென்னை: ஜனவரி 15ந்தேதி மகரவிளக்கு பூஜை நாளில் மதியம் 12 மணி வரை மட்டுமே சபரிமலை வர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையைத் தொடர்ந்து,  மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால்,  பாதுகாப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை கேரள மாநில அரசு அதிகரித்து வருகிறது. மேலும், ஆன்லைனில் புக் செய்த பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு மரக விளக்கு பூஜைக்காக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.  மகர விளக்கு பூஜை   ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. . அதன்படி மகர விளக்கு பூஜை நாளில் சபரிமலையில் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று மாலை 6மணி அளவில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காண்பிக்கப்படும் என கூறப்படுகிறது.