சென்னை:  சட்டப்பேரவையில் கவர்னர் உரை அன்று நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிரதிநிதிகள் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் இன்று முற்பகல் குடியரசு தலைவரை சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஆரம்பம் முதலே சர்ச்சைகள் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு   ஜனவரி 9ம் தேதி தொடங்கி சட்டப்பேரவை கூட்டத்தில் கவர்னர் உரையின்போது, திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்து கோஷமிட்தும், அதை சபாநாயகர் தடுக்காததும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து கவர்னர் உரையை வாசித்த ஆளுநரும்,  அரசின் பல தகவல்களை தவிர்த்து, தனது கருத்தையும் கூறினார். இதனால், ஆளும் திமுக அரசு, அவருக்கு தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் ஆளுநர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அன்றைய விவகாரங்கள் முழுவதும் மரபுமீறலாக பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளுறும் சர்ச்சைகளாகவே தொடர்கின்றன.

இந்த நிலையில், கவர்னரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியா, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில், தமிழக எம்.பி.க்கள், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபணி உள்பட  முக்கிய நிர்வாகிகள் இன்று முற்பகல் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, மனு கொடுக்கின்றனர்.

அரசியல் சாசன விதிமுறைகளை மீறி செயல்படும் கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளதாகவும், மேலும் நிலுவையில் உள்ள நீட் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.