சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் 13ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். முன்னதாக ஆளுநரின் நடவடிக்கை குறித்து பேசியவர், உயர் பதவிகளை பெறுவது ஆளுநரின் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன், ஆளுநர் உரைக்கு கடந்த 7ந்தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறினார்.
2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை வட்டத்தொடர் இன்று நடைபெற்றது. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்றைய உரையின்போது, ஆளுநருக்கு திமுக கூட்டணி கட்சிகள் அவை முன்பு வந்து கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 8 நிமிடங்கள் அவர் கோஷமிட்ட நிலையில், அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் முன்வராத நிலையில், அவர்களாகவே சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் உரையின்போது, திராவிடம், திராவிட மாடல், தமிழ்நாடு அமைதிப்பூங்கா போன்ற வார்த்தைகளை தவிர்த்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பின்னர், சபாநாயகர் ஆளுநர் உரையை வாசித்தபோது, திராவிட மாடல், திராவிடம், அமைதிப்பூங்கா போன்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாக வாசித்தார்.
ஆளுநர் உரை முடிவுடைந்ததும், கவர்னர் தன்னிச்சையாக பேசிய ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். தொடர்ந்து, அதிமுக, பாஜகவும் வெளியேறியது.
அதுதொடர்பாக பேரவையில் பேசிய ஆளுநர், ஆளுநரின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றவர், நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொடுப்பதை அப்படியேதான குடியரசு தலைவர் படிக்கிறார். அரசின் மசோதாக்களுக்கு பதில் இல்லை, ஏன் இப்படி நடக்கிறது என தெரியவில்லை என்று கூறியதுடன், மத்தியஅரசை திருப்திப்படுத்தி உயர் பதவிகளை பெறுவது ஆளுநரின் நோக்கமா என்ற சந்தேகம் எழுவதாக கூறியவர், மேற்குவங்க மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்த ஆளுநருக்கு குடியரசு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டியவர்,. உரையில் இருந்ததை ஆளுநர் முன்கூட்டியே மாற்ற கூறியிருந்தால், மாற்றப்பட்டிருக்கலாம் என்றார்.
மேலும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் உச்சரிக்கவில்லை என்றவர், அவை நடவடிக்கைகள் முடிவதற்கு முன்பாகவே, ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பா ஆளுநர் வெளியேறியுள்ளார் என்றவர், கடந்த 5ம்தேதி ஆளுநர் உரை அவருக்கு அனுப்பப்பட்ட நிலையில், 7ந்தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று சுட்டிக்காட்டிய சபாநாயகர், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் உள்ள ஆளுநர்கள் இவ்வாறு செயல்படுவது வருத்தம் என்று கூறினார்.
இதையடுத்து, பேரவையை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து, அலுவல் ஆய்வு குழு கூடிய முடிவு செய்தது. அதை சபாநாயகர் பேரவையில் அறிவித்தார். அதன்படி, இந்த கூட்டத்தொடர் 13ந்தேதி வரை நடைபெறும் என அறிவித்தார்.
நாளை கூட்டத்தொடரில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து 3 நாட்கள் அவை நடவடிக்கை தொடரும். வருகின்ற 11, 12ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என்றும், ஜனவரி 13ஆம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.