சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 31ந்தேதி வரை அரசு வேலைக்காக காத்திருப்போர்கள் எத்தனை பேர் என்பதை தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில், 1லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31 வரையில் 67.75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலக்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவித்து உள்ளது.ஹ
இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையில் உள்ள நிலவரம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 67.75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலக்தில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
இவர்களில், ஆண்கள் 36.14 லட்சம் பேரும், பெண்கள் 31.60 லட்சம் பேரும் பதிவு செய்து உள்ளனர். மேலும், 19 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் 27.95 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர் என்கிற விவரமும் வெளியாகியுளது.