அகமதாபாத்: தனது தாயார் அதிகாலையில் மறைந்த நிலையில், அவருக்கு உடனடியாக இறுதிக்காரியம் செய்து, அவரது உடலுக்கு சிதை மூட்டிய பிரதமர் மோடி, ஏற்கனவே திட்டமிட்டப்படி, மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் தொங்கி வைத்தார். விழாவுக்கு நேரடியாக மேற்குவங்க செல்ல முடிடியாத நிலையில், அதற்கு மேற்குவங்க மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர், குஜராத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய கங்கா கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார் பேசினார்.
மேற்குவங்கத்தில் ஹவுரா – நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, தனது தாயாரின் இறுதிச்சடங்கை காலையிலே முடித்துவிட்டு, அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, காணொளி காட்சி மூலம் ஹவுரா-நியூ ஜல்பைக்குரி இடையே வந்தே பாரத் ரயில்சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த வந்தேபாரத் விரைவு ரயில் ஹவுரா-நியூ ஜல்பைக்குரி இடையேயான 600 கி.மீ தூரத்தை ஏழரை மணி நேரத்தில் கடக்கிறது . ஹவுரா-நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் ரயில் போல்பூர், மால்டா டவுன், பார்சோய் ஆகிய 3 நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்று நான் மேற்கு வங்கத்திற்கு வரவிருந்தேன், ஆனால் தனிப்பட்ட காரணங்களால் என்னால் அங்கு வர முடியவில்லை. அதற்காக வங்காள மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்கு மேற்கு வங்க மக்கள் சார்பில் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நாள் உங்களுக்கு ஒரு சோகமான நாள். உங்கள் தாய் என்றால் எங்கள் அம்மா என்றும் அர்த்தம். உங்கள் பணியை தொடர கடவுள் உங்களுக்கு வலிமை தரட்டும், கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹவுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர்.