டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற சாலை விபத்துக்களில் 1.53 லட்சம் பேர் பலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு சாலை விபத்துக்கள் வெகுவாக குறைவு என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2021-மஆண்டு நடந்த விபத்துகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் , ‘இந்தியாவில் சாலை விபத்துகள் -2021’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் காயம் அடைந்துள்ளனர். *
2021ம் ஆண்டு சாலை விபத்து, 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ல் சாலை விபத்துகள் 8.1 சதவீதம் குறைந்துள்ளன. காயம் அடைவது 14.8 சதவீதம் சரிவு அடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில், ஆனால் 2019 உடன் ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் 1.9 சதவீதம் அதிகரித்துள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
ஆனால், கடந்த 2020-ம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் விபத்துகள், விபத்துகளில் ஏற்படுகிற பலிகள், காயங்கள் குறைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணம், கொரோனா பெருந்தொற்றால் நாட்டில் பொதுமுடக்கம், ஊரடங்கு அமலில் இருந்ததால், சாலை விபத்தக்குள் குறைந்துள்ளன.
இந்த தகவல்கள் அனைத்தும்