ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத இயக்க தலைவரான மறைந்த கிலானி வீடு உட்பட 122 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எஸ்ஐஏ (State Investigation Agency (SIA) எனப்படும் மாநில புலனாய்வு நிறுவனம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் ஜமாத்தே – இ – இஸ்லாமி என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் சையத் அலி ஷா ஜிலானி. இவர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக தெஹ்ரிக் – இ – ஹூரியத் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வந்தார். மேலும் பாகிஸ்தான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, காஷ்மீரில் பயங்கரவாத்தை வளர்த்து வந்தார். இதனால் அவர்மீது ஏராளமான வழக்குள் உள்ளன.
கிலானியின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கை காரணமாக, அவரது கட்சியான ஜமாதி – இ – இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, மாநில புலனாய்வு நிறுவனமான எஸ்.ஐ.ஏ., கிலானிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி உள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, குல்காம், பட்கம் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் உள்ள கிலானியின் வீடு உள்ளிட்ட 122.89 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
கடந்த 1929ல் ஜம்மு – காஷ்மீரின் சோபோர் நகரில் பிறந்த கிலானி, கடந்த ஆண்டு செப்டம்பரில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர், ஜம்மு – காஷ்மீரின் சோபோர் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.