சென்னை: தமிழ்நாட்டில்  ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் மனுமீது  பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல்துறை மற்றும் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைத்துள்ளது.தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த தமிழகஅரசு பல்வேறு காரணங்களை கூறி தடுத்து வருகிறது .ஆர்எஸ்எஸ் பேரணி வளாகத்துக்குள் நடத்த தமிழக அரசு கூறியது சிறுபிள்ளைத்தனமானது என்றும் குற்றம் சாட்டடப்படுகிறது.  இது இந்து மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகஅரசு ஒருதலைப்பபட்சமாக நடந்து கொள்வதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து தமிழகஅரசு பயப்படுவதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை குறிப்பிட்ட வளாகத்துக்குள் நடத்திக்கொள்ள பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனவரி 22, 29-ஆம் தேதிகளில் அணிவகுப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க இருப்பதாக  தெரிவித்தார். இதையடுத்து, மனுகுறித்து,  தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரினால், அதுகுறித்து காவல்துறை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதுடன்,  வழக்கு விசாரணை ஜனவரி.5ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.