‘கத்துக்குட்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இரா. சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் நந்தன்.

இதில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் வெளிட்ட நந்தன் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரபரப்பாக பேசப்பட்டது.

இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சசிகுமார் பிறகு தனது கேரக்டர் என்னவென்று தெரிந்ததும் ஏன்தான் ஒத்துக் கொண்டோமோ என்று மிகவும் கஷ்டப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து இயக்குனர் இரா. சரவணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது “ஏன்டா இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டோம்னு பல நாள் வருத்தப்பட்டேன்.

கேரக்டரை உள்வாங்கவே முடியலை. வேற காட்சிகளை எடுக்க சொல்லிட்டு வந்துட்டேன்.

எதையும் கடந்துபோற பக்குவம் கொண்ட அந்த கேரக்டரா மாறிய பின்னால பேய் பிடிச்ச மாதிரி இருந்தது” என்று நடிகர் சசிகுமார் கூறியதாக அதில் பதிவிட்டுள்ளார்.

கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நந்தன் படத்தில் சரவணன் இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சபரிமலை செல்ல விரதம் இருந்துவந்த சசிகுமார் நந்தன் படக்குழுவினருடன் இருமுடி கட்டி மதுரையில் இருந்து சபரிமலைக்கு சென்றுள்ளார்.