சென்னை: அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டு, அந்த துறை இன்று புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சற்று முன் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து தலைமைச்செயலகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில், விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற பெயர் பலகை பொருத்தப்பட்டது.

Patrikai.com official YouTube Channel