காந்திநகர்: குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். காவி துண்டுடன் ஓபிஎஸ் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக இதுவரை பெற்றிராதவாறு அமோ வெற்றி பெற்றுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இதையடுத்து, ஏழாவது முறையாக மீண்டும் குஜராத் மாநிலத்தை ஆளும் அதிகாரத்தை பாஜக பெற்று இருக்கிறது பாஜக. தற்போது முதல்வராக இருக்கும் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இன்று காந்தி நகரில் அரசு புதிய தலைமைச் செயலகம் அருகே அமைந்திருக்கும் ஹெலிபேடு மைதானத்தில் இன்று மதியம் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் பூபேந்திர படேலுக்கு ஆளுநர் ஆச்சாரிய தேவரத் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பூபேந்திர படேல் தொடர்ந்து இரண்டாவது முறையாக குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். தமிழகத்திலிருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உட்பட பலரும் சென்று இருந்தனர். ஓபிஎஸ் காவி கொடியுடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.