சென்னை:
மாணடஸ் புயல் சென்னையில் 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்டஸ் புயல் சென்னையில் நேற்று கரையை கடந்தது. இந்த புயலினால் சென்னை முழுவதும் கழிவுகள் அதிகமானது. தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி உழியர்கள் இரவோடு இரவாக இந்தப் பணியில் ஈடுபட்டார்கள்.
1 முதல் 8 மண்டலம் வரையுள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவரக் கழிவுகளும், மண்டலம் 9 முதல் 15 வரை 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அடையார் மண்டலத்தில்தான் (33.38 மெட்ரிக் டன்) அதிகபட்ச கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.