சென்னை: மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடந்த நிலையில், மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னையை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் மழையும்கொட்டியது. இதனால் ஏராளமான மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தது. இதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கடல் அலையின் தாக்குதலால் ஏராளமான படகுகளும் சேதமடைந்துள்ளதாக கூற்பபடுகிறது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தென்சென்னையில் புயல் பாதித்த இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.