சென்னை: தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையுடன் இணைத்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாகு தெரிவித்து உள்ளார்.
இரட்டை வாக்குரிமை, இறந்து போனவர்களுக்கு வாக்குரிமை, கள்ள ஓட்டு போன்ற பல்வேறு குளறுபடிகளை தீர்க்க இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதாப் சாகு, தமிழகத்தில் 58 விழுக்காடு வாக்காளர்கள் வாக்காளர் அட்டையையும், ஆதார் எண்ணையும் இணைக்க கோரியுள்ளனர். இதுவரை 3.62 கோடி பேரின் வாக்காளர் அடையாள எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் தமிழகத்தில் வாக்காளர் அடையாள எண் – ஆதார் இணைப்பு பணிகள் முழுதாக நிறைவுபெறும்.
இவ்வாறு கூறினார்.