சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ரேசன் அரிசி உள்பட உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று சிவில் சப்ளை சிஐடி போலீசார் தமிழ்நாடு முழுவதும்  நடத்திய அதிரடி சோதனையில், 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், அதை கடத்த உதவிய 8 வாகனங்கள், கடத்தலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையிலும், கடத்தல் மூலமும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்ற விற்று வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. இதை ஏற்கனவே உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரேசன் பொருட்கள் கடத்ததை தடுக்கும் வகையில்,  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடிசோதனையின்போது மட்டும், ரேசன் கடத்தலில் ஈடுபட்ட 8வாகனங்களை மடக்கியதுடன், அதில் இருந்து சுமார் 23 டன் ரேசன் அரிசிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்லுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என 26 பேரையும் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரத்தில் ரேசன் உணவு பொருட்களை கடத்தியதாக 193 பேர்கைது 54 வாகனங்கள் பறிமுதல்!