ஐக்கிய அரபு நாடுகள் செல்பவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் இரண்டாவது பெயர் அல்லது குடும்ப பெயர் இல்லாமல் முதல் பெயர் மட்டுமே இருந்தால் அவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தியுள்ளது.

28 நவம்பர் 2022 முதல் இந்த புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று ஐக்கிய அரபு நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

21 நவம்பர் முதல் அரபு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் வேலைக்கான விசா அனுமதி பெற்றவர்கள் மட்டும் முதல் பெயர் இரண்டாவது பெயர் இரண்டிலும் பாஸ்போர்ட்டில் இருக்கும் முதல் பெயரை பதிவிட்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா, சாதாரண பயணிகள் உள்ளிட்ட இதர விசா வழங்க பாஸ்போர்ட்டில் முதல் பெயர் மட்டும் இருந்தால் போதாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாஸ்போர்ட்டில் முதல் பெயர் மட்டுமே உள்ளவர்கள் இனி அந்த நாட்டில் இருந்து வெளியேறவும் அங்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.