சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மகளிர் அணி, தொண்டர் அணி செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக தலைமையகம் வெளியிட்டு உள்ளது. இளைஞரணி துணை செயலாளர் களாக ஜோயல், ரகு, இளையராஜா, அடிபுள் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் – துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் தொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, திமுகவின் இளைஞரணி செயலாளராக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல், ந.ரகுபதி என்கிற இன்பா, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் மாநில மகளிர் அணி தலைவராக இருந்த கனிமொழி எம்.பி, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வகிந்து வந்த மாநில மகளிர் அணி தலைவர் பதவி விஜயா தாயன்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணைச் செயலாளராக விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.