சென்னை: சென்னை கொளத்தூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சென்னை பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டு திடலைதிறந்து பூப்பந்து விளையாடினார்.
சென்னை கொளத்தூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, ரூ.4.37 கோடியில் நவீன வசதிகளுடன் பள்ளியை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுஉள்ளது.
இதையடுத்து, பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டு திடலை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதையடுத்த, அந்த விளையாட்டு திடலில் பூப்பந்து விளையாடினார்.