சென்னை: நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள பிரபல ஊடகவியலாளர் யுடியூபர் சவுக்கு சங்கரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், நீதிமன்றத்தின் கண்டிஷன்ஸ் முடிந்ததும் பேசுகிறேன் என கூறினார்.
நீதிமன்ற அவதூறு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்த தமிழகஅரசு மேலும் 4 வழக்கில் அவரை கைது செய்து சிறையில் இருந்து வெளிவராத நிலையைஉருவாக்கியது. ஆனால், இந்த வழக்குகளில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடத்தி நீதிமன்றம், அவரை நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
அதன்படி, சவுக்கு சங்கர் தினமும் காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, சமூக வலைதளங்களில் எந்தக் கருத்துக்களையும் பதிவிடக் கூடாது, நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக வேண்டும், நீதித்துறை குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவே கூடாது மற்றும், 20 ஆயிரம் ரூபாய் கொண்ட பத்திரத்தில், 2 நபர்கள் பிணையம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
அதன்படி சவுக்கு சங்கர் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது செய்தியளார்கள் அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த சவுக்கு சங்கர், நீதிமன்றம் வழங்கியுள்ள கண்டிஷன்ஸ் முடியும் அனைத்துக்கும் பதில் கூறுகிறேன் என்று பதில் அளித்தார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து சவுக்கு சங்கர் இன்று காலை பதிவிட்டுள்ள டிவிட் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நடை பயிற்சியின்போது, உடன் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம், தனது மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ பார்த்தீங்களா? எப்படி இருக்கு என்று கேட்கும் வைரலான ஆடியோவை விமர்சித்து, விரைவில் புளூ சட்டை மாறனுக்கு போட்டியாக யூட்யூப் ரிவ்யூவர் அவதாரம் எடுக்கிறாரா முதல்வர்? விவாதிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு சவுக்கு ஆதரவாளர்கள் ஆரவாரமாகியுள்ளனர். மேலும், வந்ததும் வராமல் முதல் டார்கெட்டே முதல்வரா? தலைவன் வேற லெவல் என்றும் உசுப்பேற்றியுள்ளனர்.