சென்னை: உலகக் கோப்பை கால்பந்து போட்டி திருவிழா தொடங்க உள்ள நிலையில், இணையதளங்களில் சட்டவிரோதமாக போட்டிகளை பதிவு செய்யவும், ஒளிபரப்பு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா எனப்படும் சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான கத்தாரில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் வரும் 20-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகளை காண உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், கால்போட்டிகளை இந்தியா உள்பட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற வயகாம் 18 மீடியா, உலக கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக இணையதளங்களில் ஒளிபரப்பு தடை விதிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையைத் தொடர்ந்து, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12 ஆயிரம் இணையதளங்களுக்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உலக கோப்பை கால்பந்து: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு!