பாலி:  இந்தோனேசியால் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில், உலக நாடுகளில் தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்து நாட்டின் புதிய  பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து நேரில் வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, ஆகிய 19 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து  ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து பேசி உலக நடப்புகள், நாடுகளுக்கு இடையேயாயன நட்புறவு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதித்து வருகின்றன. பாலி உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்விலகிய நிலையில், அந்நாட்டின் பிரதிநிதியாக தனது வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை அனுப்பியுள்ளார்.

 நடப்பாண்டு, ஜி20 உச்சிமாநாடு,  இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இந்தோனேஷியா பொறுப்பேற்ற போது “ஒன்றாக மீள்வோம், வலிமையாக மீள்வோம்” என்பது உலகத் தலைவர்களின் மாநாட்டு கருப்பொருளாக இருந்தது.  மேலும், இந்த மாநாட்டில், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் மூன்று அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், உலகத் தலைவர்கள் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் உண்டாகியுள்ள சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த மாநாட்டில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  “உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் உக்ரைனில் போர்நிறுத்தம் மற்றும் இராஜதந்திர பாதைக்கு திரும்புவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். கோவிட் தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பல விதமான சவால்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு ஏற்ற வகையில் புதிய உத்திகளை ஒருவாக்கும் பொறுப்பு நமது தோள்களில் உள்ளது என்றும் அவர் உலகளாவிய தலைவர்களிடம் கூறினார். உலகில் பாதுகாப்பு, அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே “இன்றைய தேவை” என்றும் உலக தலைவர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும். அப்போது அவருக்கு  நேரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. முன்னதாக, அக்டோபரில், ரிஷி சுனக் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, பிரதமர் மோடி மற்றும் சுனக் ஆகியோர் தொலைபேசியில் பேசி, இரு நாடுகளுக்கும் இடையேயான “சமநிலை மற்றும் விரிவான” கட்டுபாடற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில்,  இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிடம் “அவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று கூறினார். “பிரதமர் @RishiSunak உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம்.என்று பிரதமர் மோடி ட்வீட் செய்து, இரு தலைவர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

PM @RishiSunak உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம். நரேந்திர மோடி (@narendramodi) நவம்பர் 15, 2022

முன்னதாக திங்கள்கிழமை பாலிக்கு வந்த பிரதமர் மோடி, செனகல் குடியரசுத் தலைவர் மேக்கி சால், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும்,  இந்தோனேசிய அதிபர் விடோடோ, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார்.

மாநாட்டின் முதல்நாள், நாட்டில் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் பொறுப்பேற்ற மோடி மற்றும் சுனக் – ஜி 20 உச்சிமாநாட்டின் ஓரத்தில் ஒரு சுருக்கமான உரையாடலை நடத்தினர். பிரிட்டிஷ் வரலாற்றில் வண்ணம் மற்றும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமராக சுனக்கின் வெற்றி இந்திய சமூகத்தால் பாராட்டப்பட்டது.

உச்சிமாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் அவரது சீன ஜனாதிபதி ஜி பாலியில் மூன்றரை மணி நேரம் சந்தித்து அமெரிக்க-சீனா உறவுகள் குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.