சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தால் மற்றும் ஆடு, மாடு உள்பட வளர்ப்பு பிராணிகள் பாதிக்கப்பட்டால், அதற்கான உடனடி நிவாரண தொகை வழங்குவருது தொடர்பாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுத்திருந்தால் ரூ.4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக, கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அமைச்சர் ராமச்சந்திரன் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ. 4, 800 வழங்கப்படும் என ஏற்கனவே விதி உள்ளது. அதேபோல் பசு, எருமைகள் வெள்ளத்தால் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க ஏற்கனவே அரசு விதியில் உள்ளது. அதன்படி, மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் எனதெரிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, ”வடகிழக்கு பருமவழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்கு பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்லியுள்ளது. மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கு முன் முதல்வர் எடுத்த தொடர் நடவடிக்கை தான் பொது மக்கள் பாராட்டிற்கு முக்கிய காரணம். இதனால் தான் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையிலும் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.
கடலூர், செங்கல்பட்டு, தேனி உட்பட தமிழகம் முழுவதும் 99முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் 52,751 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நிவாரண மையத்தில் மட்டும் மக்கள் உள்ளனர். அதில் 44 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் வடகிழக்கு பருவமடையால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும். இதேபோல் கால்நடை உயிரிழப்பு விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பசு, எருமை, ஒன்றிற்கு – 30,000, எருது ஒன்றிற்கு – 25,000 ரூபாய்.
செம்மறி ஆடு, ஆடு, பன்றி – 3000 ரூபாய், கன்றுக்கு – 16,000 ரூபாய்
கோழி ஒன்றிற்கு – 100 ரூபாய். வீடு சேதம் – 5,200 ரூபாய்.
வீட்டிற்குள் தண்ணீர் சென்றிருந்தால் 4800 ரூபாய்.
குடிசை முழுமையாக சேதம் – 5000 ரூபாய்,
குடிசை பகுதியாக சேதம் – 4100 ரூபாய்.
சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10 கிலோ அரிசி.
கான்கிரீட் வீடு முழுமையாக சேதம் ஒன்றிற்கு – 95,000 ரூபாய்.
மலைப்பாங்கான பகுதிவீடு முழுமையாக சேதம் – 1 லட்சத்து 1,900 ரூபாய்.