அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 3.42 மணிக்கு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.1ஆக இந்நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.