சென்னை:
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும், பிரச்சினை இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இந்நிலையில், 16ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel