சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

in

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய  உயர் சாதி ஏழைகளுக்கு 10% கல்வி, வேலைவாய்ப்பில்  இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்  நிறைவேற்றப்பட்டு, சட்டமாகி உள்ளது. இந்த சட்டத்துக்கு பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால், தமிழ்நாட்டின் பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த நிலையில் 10 சதவிகித இடம் ஒதுக்கீடு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்துவதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது . இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று திமுக அறிவித்திருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை  திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரித்து இருப்பதால் முதல்வர் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சிகள் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.  அப்படியே பங்கேற்றாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகத் தான்,  அதாவது  திமுகவின் நிலைக்கு எதிரான நிலையைத் தான் அக்கட்சிகள் எடுக்குமா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.