சென்னை: மழைக்காக பள்ளிகளுக்கு விடப்படும் விடுமுறைகள் வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்குவதாலும், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள்  பள்ளிகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி, அதிக மழை கொட்டும் நாட்களில் தமிழகஅரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகிறது. சென்னையில், இந்த வாரம் மட்டுமே 3 நாள் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல மாவட்டங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,   கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ஜனவரி 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் முதலாவது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவிற்கான லோகோ வெளியிடும் விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு, அதற்கான லோகோவை  வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, 2023ம் ஆண்டு, ஜனவரி 16 முதல் 18-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில்  700-800 புத்தக அங்காடிகளை BAPPASI- பபாசி ( தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்) அமைக்க இருக்கிறார்கள் என்றவர், இந்த புத்த கண்காட்சியும் அறிவு சார்ந்த செஸ் ஒலிம்பியாட் போன்றவது என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், மழைக்காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில் சனிக்கிழமைகளில் அவை ஈடு செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து, தமிழகஅரசு வெளியிட்டுள்ள லோகாவானது,  தமிழகத்தினுடைய பதிப்புகளை உலகமுழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும் என்பத நோக்கம்என்றவர், இக்கண்காட்சியின் மூலம் உலகளாவிய புத்தகங்களை நாம் பெறுவதற்கும் நம் தமிழ் இலக்கியத்தை அவர்கள் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும், தமிழ் படைப்பாளர்களின் எழுத்துகள் உலகம் முழுவதும் சென்று சேரும் என கூறினார்.