சென்னை: பரங்கிமலை ரயில் நிலையித்தில் மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த அவரது காதலர் சதிஷ்ஐ  மாநகர காவல் ஆணையர்சங்கர் ஜிவால் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில், கடந்த மாதம் மதிய வேளையில், கல்லூரிக்கு ச்லல தோழிகளுடன் நின்றிருந்த மாணவி சத்யப்பிரியாவை, ஒருதலையாக காதலித்து வந்த அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த  சதீஷ் என்ற இளைஞர், அவரது காதலை ஏற்க மறுத்த நிலையில், அங்கு வந்த  ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்தார். மாணவி கொலையைத் தொடர்ந்து, அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சதிஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்த வருகின்றனர். விசாரணையில், மாணவி சத்யாவை சதிஷ் ஒருதலையாக காதலித்து வந்ததும், அவரது காதலை மாணவி சத்திய பிரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சதிஷ் சத்ய பிரியாவை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்தார். பலமுறை பேச முயற்சித்தும் சத்யா பேசாமல் தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்து பத்து நாட்கள் பின் தொடர்ந்து சென்று கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.  கொலை செய்த தினத்தன்று தன்னையும் அறியாமல் குழப்ப மனநிலையில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும், உண்மையில் கொலை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என சி பி சி ஐ டி போலீசாரிடம் சதீஷ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில்,  சதிஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சிபிசிஐடி பரிந்துரையின் பேரில் மாநகர காவல்ஆணையர் சதிஷை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.