தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் ஆதார் அட்டை மற்றும் தாய் சேய் நல அட்டை இரண்டும் இல்லையென்று கூறி மருத்துவம் பார்க்க மறுத்ததால் இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மட்டுமன்றி தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த கஸ்தூரி (30) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் இறந்ததை அடுத்து கர்ப்பிணியாக இருந்த இவர் தனது 6 வயது மகளுடன் தும்கூரு-வில் உள்ள பாரதி நகரில் வேலைக்காக சென்றார்.

தும்கூரு சென்று 40 நாட்கள் ஆன நிலையில் அக்கம்பக்கத்தினர் இவரை பிரசவத்திற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ஆதார் அட்டை மற்றும் தாய் சேய் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் அட்டை எதுவும் இல்லையென்று கூறி இவருக்கு சிகிச்சையளிக்க மருத்ததையடுத்து வீடு திரும்பினார்.

வீட்டிற்கு வந்த கஸ்தூரி பிரசவவலியால் துடித்தார் இரட்டை குழந்தைகளை சுமந்திருந்த இவருக்கு ஒரு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது மற்றொரு குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்தது.

வீட்டிலேயே குழந்தை பிறந்ததில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் தாயும் உயிரிழந்தார்.

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மருத்ததையடுத்து மூன்று உயிர்கள் பலியாகியிருப்பது அந்த பகுதியில் மட்டுமன்றி தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாததால் அவரது மகளை அங்குள்ள காப்பகத்தில் வைத்துள்ளனர்.

மேலும், இவருக்கு மருத்துவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் உள்ளிட்ட இரண்டு ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.