இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,  வஜிராபாத்தில் இன்று தனது சுதந்திரப் பேரணி ஜஃபராலி கான் சவுக்கில்  நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேரணியை நோக்கி மர்ம நபர்  துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில்,  இம்ரான்கான் காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவரது உதவியாளரும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.