சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை கட்டிடங்களை திறந்து வைத்து  சிலருக்கு பணியானை வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 கோடியே 64 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் மதுரை மற்றும் தேனி மூன்று கள்ளர் மாவட்டங்களில் மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள உண்டு உறைவிடப்பள்ளிகள், மதுரை மாவட்டத்தில் 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள்,நாகப்பட்டினம்,தருமபுரி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 கல்லூரி விடுதிக்கட்டடங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காகரூ.37.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும்பள்ளிக் கட்டடங்கள் – 6 புதிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களையும் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கென தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.