பிரிவினை மற்றும் வன்முறையைத் தூண்டாத நாகரீகமான மற்றும் ஆரோகியமான விவாதத்திற்கு உதவும் பொதுவான டிஜிட்டல் தளமாக ட்விட்டர் மாற்றப்படும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தார்.

பக்கசார்பாக செயல்பட்டு பிரிவினையை தூண்டுவதன் மூலம் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைக்கின்ற ஊடகங்களுக்கு மத்தியில் ட்விட்டர் மாறுபட்ட தளமாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், ட்விட்டரில் பதிவிடும் உள்ளடக்கங்கள் குறித்து மதிப்பாய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மதிப்பாய்வு குழு உருவாக்கப்படும் வரை எந்த ஒரு உள்ளடக்கத்தையும் பதிவிடுவது குறித்து முடிவு எடுக்கப்பட மாட்டாது.

அதேபோல் இந்த குழு அமைக்கப்பட்ட பிறகு தான் முடக்கப்பட்ட கணக்குகளை மீட்டெடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டரை மறுசீரமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு கல்தா… மஸ்க்-கிற்கு வாழ்த்து சொன்ன ராகுல்… பதிவுகளின் உண்மைத் தன்மையை ஆராயச் சொன்ன மோடி…