சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெய்லர்.
சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் கடலூரில் நடைபெற்றது.
அப்போது ரஜினியைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனை அடுத்து போயஸ் கார்டனில் சரவெடி வெடித்து தீபாவளி கொண்டாடினார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் ஜெய்லர் படத்திற்குப் பிறகு லைகா நிறுவன தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசிய லைகா நிறுவன சி.இ.ஓ. தமிழ் குமாரனிடம் இது தொடர்பாக சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது, விரைவில் அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.