அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இடைக்காலத் தலைவராக செயல்பட்டு வந்த சோனியா காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கே விடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்த நிலையில், கட்சியின் செயற்குழுவுக்கு (CWC) பதிலாக 47 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவை நியமித்துள்ளார்.
வழிகாட்டு குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே. ஆண்டனி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தவிர கே.சி. வேணுகோபால், ப. சிதம்பரம், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஜெயராம் ரமேஷ், தினேஷ் குண்டுராவ், கே.எச். முனியப்பா தவிர முகுல் வாஸ்னிக், அபிஷேக் சிங்வி, திக்விஜய் சிங் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் A. செல்லகுமார், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.