சென்னை: முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை பெறுவதில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கிடையே மோதல் நீடித்தநிலையில், அந்த தங்கக்கவசத்தை  வருவாய்துறையிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரும் 28 முதல் 30ஆம் தேதி  வரை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட  உள்ளது. அப்பொழுது கமுதி அருகே உள்ள தேவர் சமாதியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டதங்க கவசம் பொருத்தப்படுவது வழக்கமான நடைமுறை. இதற்காக, மதுரை அண்ணாநகரில் உள்ள ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க கவசத்தை, அதிமுக பொருளாளர் உள்பட சிலர்கையெழுத்திட்டு, வாங்கி, தேவர் சிலை பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்படும்.

இந்த நிலையில்,  அதிமுகவில் எழுந்த ஒற்றைத்தலைமை பிரச்சனை, அதையடுத்து, கட்சியின் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் நிக்கப்பட்டதுடன், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனால், தங்கக்கவசம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு நிதிமன்றத்துக்கு சென்றது.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  தங்க கவசத்தை தங்கள் தரப்பிடம் ஒப்படைக்கக் வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உரிமை கோரினர். இதையடுத்து விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தங்கக்கவச உரிமையை இபிஎஸ் அல்லது ஒபிஎஸ் தரப்பிற்கு செல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்கப்படுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது..

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தேவர் தங்க கவசத்தை வங்கியில் இருந்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெற்று, கவசந்தை அணிவித்து விட்டு மீண்டும் அதனை பெற்று வங்கியில் ஒப்படைக்குமாறும், இதற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு இந்தாண்டு மட்டுமே செல்லுபடியாகும் எனவும், உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.