மதுரை: தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி, அவர்களின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மதுரை எஸ்.பி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் ஜெயந்தி நடைபெற உள்ளது. இதையட்டி, தென்மாவட்டங்களைச் சேர்ந்த சமுதாய மக்கள், காளையார்கோயில், பசும்பொன் கிராமத்துக்கு கார் மற்றும் வாகனங்களில் சென்று மரியாதை செய்வார்கள். இந்த நாட்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கடுமையான விதமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடரபாக செய்தியாளர்களை சந்தித்த மதுரை எஸ்.பி. ”செப்., 11ல் பரமக்குடியில் நடந்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டத்திற்குள் காவல்துறை, அரசின் விதியை மீறியது தொடர்பாக மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 31 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 பைக் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைவு கூர்ந்ததுடன் ததுடன், நாளை (அக்., 27) மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார் கோயிலுக்கும், தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி அக்.,29, 30 ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கும் சொந்த கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
மதுரை மாவட்டத்திற்குள் காவல்துறை, அரசின் விதியை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வோம்.
சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்வது குறித்து சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும்.
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும்.
இந்த பகுதிகளுக்கு போகும் வழியிலுள்ள மதுக்கடைகள் மூடப்படும்.
சோதனை சாவடிகளில் வாகனங்கள் பரிசோதிக்கப்படும்.
தவறு புரிந்தோரை கைது செய்யப்படுவார்கள். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் உடனே விடுவிக்கப்படமாட்டாது. நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துப்படும்.
இதன்மூலம் பண விரயம், நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டிய சூழல் உருவாகும்.
வீதிமீறலை கண்டறிய மதுரை மாவட்ட எல்லைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கப்படும்.
காவல்துறையினர் மூலம் வீடியோ எடுக்கப்படும்.
அரசு, காவல்துறையினர் வாகனங்களில் ஏறி நின்று ரகளை செய்வோர் கைது செய்யப்படுவர்.
இது போன்ற நிகழ்வை சமூக வலைத்தளங்களில் பரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு தலா 2 கண்காணிப்பு வாகனங்கள் வழங்கப்பட்டு, அக்காவல் நிலைய எல்லைகளில் கண்காணிக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் பட்டாலியன், உள்ளூர் போலீஸார் உட்பட சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துகிறோம்.
அனுமதி பெற்ற வாகனங்கள் எவ்வித வீதிமீறலும் இன்றி முறையாக சென்றுவர அறிவுறுத்தப்படுகிறது.
காவல்துறையினருக்கு ஒத்துழைக்கவேண்டும்.’
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் அக். 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் தலைமையில் ஐந்து டிஐஜிக்கள், 28 எஸ்பி க்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பாதுகாப்பு முன் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் தென் மண்டல ஐ.ஜி தலைமையில் 5 டி.ஐ.ஜிகள், 30 எஸ்.பிகள் முன்னிலையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர் என்று தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தகவல் அளித்துள்ளார்.