சென்னை: தீபாவளிப்பண்டிகையையொட்டி, இன்று சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 500 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் நேற்று (24ந்தேதி) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும், கடந்த இரு தினங்களாக குழந்தைகள் பட்டாசு கொளுத்தி தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். சிலர் இன்று கொண்டாடி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு, பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடினர்.
சென்னையில் தினமும் சராசரியாக 5,300 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை, மக்கா குப்பை என 2 வகையாக பிரிக்கப்பட்டு வீடுதோறும் சேகரிக்கப்படுகின்றன. 15 மண்டலங்களிலும் வீதிகளில் உள்ள குப்பை தொட்டிகள் மற்றும் பொது இடங்களில் குவியும் குப்பைகள் மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் மூலம் அள்ளப்படுகின்றன. இந்த நிலையில் தீபாவளியையொட்டி மேலும் 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய மாநகராட்சி அதிகாரிகள்,, தீபாவளியையட்டி, மலை போல் குவிந்தன. சென்னை நகரின் முக்கிய வீதிகளில் விடிய விடிய நடந்த தூய்மை பணிகள் மூலம் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் பகுதிகளில் பட்டாசு குப்பைகளை அகற்றம் பணியில் இரவு-பகலாக தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களில் பட்டாசு வெடித்ததின் மூலம் 500 டன் குப்பைகள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தேங்கியது. அதனை உடனடியாக அள்ளும் பணி 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் மூலம் நடைபெற்றது.
வழக்கமாக எடுக்கப்படுகின்ற 5,300 மெட்ரி டன் குப்பைகளோடு தீபாவளி குப்பைகள் 500 டன் குப்பைகள் கூடுதலாக சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை வீதிகளில் தீபாவளி விற்பனை கழிவுகள் ஆடு இறைச்சி, மாடு, கோழி இறைச்சி கழிவுகள், ஓட்டல், இனிப்பு கடைகள் உள்ளிட்ட தீபாவளி பண்டிகை விற்பனை மூலம் உருவான குப்பை சென்னையில் பல்வேறு இடங்களில் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கம் மிகுந்த பகுதியில் குப்பை வண்டிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத கையில் குப்பை அள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலையில் இருந்து மாநகராட்சி அதி காரிகள், பல்வேறு இடங்களில் முகாமிட்டு தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் கடந்த 2 வருடமாக தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமில்லாத நிலையில் இந்த ஆண்டு பட்டாசு மற்றும் ஜவுளி விற்பனை அமோகமாக நடந்துள்ளது. மேலும் மழை பாதிப்பு இல்லாமல் இருந்ததால் அனைத்து தீபாவளி வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் குப்பைகளும் பெருமளவில் குவிந்துள்ளன. அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.