சுறுசுறுப்புக்கு பெயர் போன எறும்பை ஸ்டாப் சொல்லி போட்டோ எடுத்ததால் கொடுத்த டெரர் லுக் உலகயே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
2022 ம் ஆண்டுக்கான நிக்கான் ஸ்மால் வோர்ல்டு போட்டோ மைக்ரோகிராபி விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எறும்பின் முகம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் உலகளவில் வைரலாகி வருகிறது.

லிதுவேனியாவைச் சேர்ந்த யுகேனிஜுஸ் கவலியஸ்கஸ் என்ற வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கு பரிசு பெற்று தந்திருக்கும் இந்த சிறிய உயிரினத்தின் புகைப்படம் மனிதர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு திகிலூட்டியுள்ளது.
சிவந்த கண்கள், நீளமான கூறிய பற்களுடன் கோபப்பார்வை பார்க்கும் இந்த எறும்பு புடைப்படம் நிக்கான் கேமரா மூலம் ஐந்து மடங்கு ஜும் செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel