சண்டிகர்: கடந்த அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50கோடி வரை ஏலம் போனது என அப்போதைய  கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல்ரகளை தெரிவித்து உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.

தமிழ்நாட்டின் 14வது  ஆளுநராக பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு முதல் முதல் 2021ம் ஆண்டு வரை பணியாற்றினார். தற்போது அவர் பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்து வருகிறார். அங்கு துணைவேந்தர் நியமனத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. மாநில அரசின் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லூதியானா வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் முற்றியுள்ளது. இந்த நிலையில் சண்டிகரில் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நியமனத்தில் தாம் தலையிடுவதாக வந்த புகார்களை மறுத்தார். பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்றவர், தான்  நான்கு ஆண்டுகள்  தமிழ்நாட்டு ஆளுநராக இருந்ததாகவும் அங்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது என்றும் புரோகித் கூறியவர், அங்கு துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50 கோடி வரை விற்கப்படும் சூழல் நிலவியது.

ஆனால், தாம் சட்டப்படி தமிழ்நாட்டில்  27 துணைவேந்தர்களை நியமித்ததாகவும் அவர் குறிப்பிட்டவர்,  அதனால் பஞ்சாப் அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்றவர்,  துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு அரசு மூன்று முறை எனக்கு கடிதம் அனுப்பியது. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு பங்கு இல்லை என்றால், பதவி நீட்டிப்பு வழங்குவதில் மட்டும் அவருக்கு எப்படி பங்கு இருக்க முடியும்? மூன்று முறை தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் முழுநேர துணை வேந்தர் நியமனத்திற்கு என்னிடம் ஒப்புதல் பெறப்பட வில்லை. பஞ்சாப் மாநிலத்தின் வேளாண் பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் தான். தலைமைச் செயலாளர் அல்ல. இந்த விவகாரத்தில் நான் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளேன். அந்தப் பணியை செய்வதில் இருந்து என்னை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.