அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
83.11 ரூபாய் கொடுத்தால் தான் ஒரு அமெரிக்க டாலர் வாங்க முடியும் என்ற வரலாறு காணாத உயர்வை பெற்றிருக்கிறது டாலர்.
இதனால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரும் சிக்கலை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாய் வீழ்ச்சி அடையவில்லை மாறாக அமெரிக்க டாலரின் மதிப்பு தான் திடமாக உயர்ந்து வருகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
डॉलर के मुकाबले फिर रुपया रिकॉर्ड निचले स्तर पर, 83 पार पहुँचा।गिरता रुपया हमारी इकॉनमी के लिये काफी खतरनाक साबित हो सकता हैं।
वित्त मंत्री ने कहा कि रुपया कमज़ोर नहीं हो रहा, डॉलर मज़बूत हो रहा है।सिर्फ बयानों से काम नहीं चलेगा, केंद्र सरकार को जल्द ही ठोस कदम उठाने होंगे।
— Mallikarjun Kharge (@kharge) October 20, 2022
இதுபோன்ற வெற்று அறிக்கைகளை பதிலாக இந்திய ரூபாயையும் பொருளாதாரத்தையும் சரிவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.