டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரும் 26ந்தேதி தலைவராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 17ந்தேதி நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே  7,897 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் கட்சி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நேரு-காந்தி குடும்பத்திற்கு வெளியே இருந்து அதன் முதல் தலைவரை புதன்கிழமை தேர்ந்தெடுத்துள்ளது. கார்கே  ராஜதந்திரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய சசி தரூரை தோற்கடித்தார் என்று அக்கட்சியின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். கடந்த 24 ஆண்டுகளில் நேரு-காந்தி குடும்பத்தை சாராத  ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக  மல்லிகார்ஜூன கார்கே பதவி இருக்க இருப்பதாக தவல் வெளியாகி உள்ளது.

தற்போது 90 வயதாகும் கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சி, வரும்  2024 பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவாலாக இருப்பாரா  என்பது, அவரது அடுத்தடுத்த  நடவடிக்கையை பொறுத்தே அமையும்.