மும்பை:
பிசிசிஐ-ன் 91வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று கூடுகிறது.

பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, பதவி விலகினார்.

இதையடுத்து பி.சி.சி.ஐ.,யின் 36-வது தலைவராக 1983ல் இந்திய அணி உலக கோப்பை வெல்லக் கைகொடுத்த ரோஜர் பின்னி இன்று தேர்வு செய்யப்படுகிறார்.

இதுமட்டுமின்றி செயலராக ஜெய் ஷா, துணைத்தலைவராக ராஜிவ் சுக்லா தொடர பதவியில் உள்ளனர்.

பொருளாளராக மகாராஷ்டிரா பா.ஜ., தலைவர் ஆஷிஷ் ஷேலர், இணை செயலாளராக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு நெருக்கமான தேவஜித் சய்கியா ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.