சென்னை: மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், அக்டோபர் 15-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பையும், இந்தியா முழுவதும் ஒரே பொதுத் தேர்வு திட்டத்தையும் பாஜக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அக்டோபர் 15-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்துள்ளார். மாவட்டங்களின் தலைநகரங்களில் இந்தி திணிப்பை எதிர்த்தும், ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.