பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் ராகுல் காந்தி நடை பயணத்தின் போது, சோனியா ராகுலை பார்க்க ஓடி வந்த போது கீழே விழுந்த சிறுமியை பார்த்து பதறிபோன சோனியா காந்தி, அந்த குழந்தையை தூக்கி எடுத்து, அணைத்து ஆறுதல் கூறிய காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை தற்போது கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை மாண்டியா பகுதியில் இருந்து தனது நடை பயணத்தை ராகுல் காந்தி துவங்கினார். இந்த ஒற்றுமை நடைபயணத்தில் இடையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். உடல்நிலை காரணமாக நீண்ட நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் இந்த யாத்திரையில் பங்கேற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்றைய நடைபயணத்தின்போது, சோனியா, ராகுலை வரவேற்கும் வகையில், தேசிய கொடியுடன் ஓடி வந்த சிறுமி, சாலையில் தவறி விழுந்தார். இதைக்கண்ட சோனியா, ராகுல் பதறியதுடன், அந்த குழந்தையை தூக்கி எடுத்து, அணைத்து ஆறுதல் கூறினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்தஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் வெற்றி பெற, காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தி பாஜகவிற்கு எதிராக வலுவான முறையில் போராட வேண்டும் எனவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடம் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன.