சென்னை: டெல்லியில் ஆட்சி செய்து வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசின் மதுவிலக்கு கொள்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஐதராபாத், பெங்களூரு உள்பட நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஏற்கனவே துணைமுதல்வர் மனிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதுடன், அவருக்கு சொந்தமான இடம் உள்பட பல இடங்களில் சோதனையும் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஐதராபாத், பெங்களூரு உள்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான கொள்கையில் டெல்லி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எழுந்த புகாரில் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.