டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில்,  வரும் 11ந்தேதி  அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஜார்ஜ்  இறந்த பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது.  தொடர்ந்து, 70 ஆண்டுகள் இங்கிலாந்தை சிறப்பாக ஆட்சி செய்தார். அவர்  தனது 96வயது வயதில் நேற்று (செப்டம்பர் 8ந்தேதி, 2022)  இரவு காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் 10 நாட்கள் நடைபெறும் அந்நாட்டு அறிவித்து உள்ளது.

ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பல நாட்டு தலைவர்கள், இறுதி சடங்கில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்,  ராணி எலிசபெத்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை மறுநாள் (11ந்தேதி) அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்து உள்ளத.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி இந்தியா முழுவதும் செப்டம்பர் 11ஆம் தேதி ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இதை  நாளை அன்றைய தினம்  தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும்   தெரிவித்துள்ளது.