லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குகள் 10நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.  ‘ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என குறிப்பிடப்படும் இறுதிச்சடங்குகள் குறித்த விவரங்களை பங்கிங்காம் அரண்மனை அறிவித்து உள்ளது.

இங்கிலாந்து ராணியார் இரண்டாம் எலிசபெத் வியாழக்கிழமை ஸ்கொட்லாந்தில் தமது 96வது வயதில் நேற்று இரவு காலமானார். இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் துக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட உள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ் என குறிப்பிடப்படும் இறுதிச்சடங்கக்கான  முன்னெடுப்புகள்  குறித்த  தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 12 நாட்கள் என்னென்ன  நடைபெறும் என்பது குறித்து வெளியிடப்பட்ட உள்ளது.

இன்று 2வது நாள்,  காலை, கவுன்சிலின் உறுப்பினர்கள் இளவரசர் சார்லஸை புதிய அரசராக அறிவித்த உள்ளனர்.  அத்துடன், இளவரசர் சார்லஸ் முடிசூட்டும் விழா தொடர்பிலும் முடிவெடுக்கப்படும். துக்கமனுசரிக்கப்படும் இந்த நாட்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

அவர் தொலைப்பேசியில் பிரதமரைத் தொடர்பு கொண்டு, “லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்” என்ற வாக்கியத்தைத் தெரிவிப்பார். அதன் பின்னர் அமைச்சரவை செயலாளர் மூலம் மற்ற அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்படும்.

பொதுமக்களுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் உரியமுறைப்படி தெரிவிப்பார்கள்.  இதுமட்டுமின்றி, நாட்டு மக்களுக்கு பிரதமர் தான் தகவலை அறிவிப்பார். இரண்டாவது நாள் காலை,  பிரித்தானிய கவுன்சிலின் உறுப்பினர்கள் இளவரசர் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள்.

செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.  நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

மூன்றாவது நாள் ராணியாரின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பும். அந்த நிகழ்வில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள்.

நான்கு மற்றும் ஐந்தாவது நாட்களில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் மன்னர் சார்லஸ் இரங்கல் பிரேரணையைப் பெறுவார். தொடர்ந்து லண்டனில் தமது பணியை முடித்துக் கொண்டு ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு விஜயம் செய்வார்.

ஆறாவது நாள் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து ராணியாரின் உடல் பொதுமக்கள் ஊர்வலத்தினூடே வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்படும்.

7வது, 8வது, 9வது நாள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்படும்.

மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.

பத்தாவது நாள்  ராணியாரின் இறுதிச்சடங்குகள்  தொடங்கும். வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும். அன்று நண்பகல், நாடு முழுவதும் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்படும்.

தொடர்ந்து லண்டனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் உடன் செல்ல விண்ட்சர் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்படும். ராணியாரை விண்ட்சர் அரண்மனையின் கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்வதற்கு முன் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் வைத்து அர்ப்பணிப்பு ஆராதனை முன்னெடுக்கப்படும்.

விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ஒரு இறுதி சேவைக்குப் பிறகு, ராணி ஏப்ரல் 2021 இல் இறந்த அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் கோட்டை மைதானத்தில் அடக்கம் செய்யப்படுவார்.