டெல்லி: சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப் பட்டிருந்த நிலையில், இதுதொடர்பாக மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினையை பரிசீலிக்க சரியான மன்றம் நாடாளுமன்றமே தவிர நீதிமன்றம் அல்ல என்று கூறியது.
உங்கள் விளம்பரங்களுக்காக நாங்கள் வழக்கை விசாரிக்க முடியாது என மனுதாரரை எச்சரித்தனர்.